உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர அமர்வானது, பெருந்தொற்று ஏற்பட்ட காலத்திற்குப் பிறகு நடத்தப்படும் உலகத் தலைவர்களின் முதல் நேரடிச் சந்திப்பாக 2022 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நிகழ உள்ளது.
2022 ஆம் ஆண்டு உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர அமர்வின் கருத்துரு "ஒன்றுபட்டுச் செயலாற்றி, நம்பிக்கையை மீட்டெடுத்தல்" என்பதாகும்.
பொதுப் பிரமுகர்கள் மற்றும் உலகத் தலைவர்கள் மீண்டும் இணைவதற்கும், நுண்ணறிவுகளைப் பரிமாறிக் கொள்வதற்கும், புதிய முன்னோக்குக் கருத்துகளைப் பெறுவதற்கும், தீர்வுகளை முன்னெடுப்பதற்கும் நேரில் சந்திக்கும் ஒரு உத்தி சார்ந்த இடத்தில் இந்த அமர்வு நடைபெறுகிறது.