TNPSC Thervupettagam

உலகளாவிய அமைதிக் குறியீடு 2025

June 28 , 2025 6 days 55 0
  • பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் (IEP) ஆனது 2025 ஆம் ஆண்டு உலகளாவிய அமைதிக் குறியீட்டினை (GPI) உருவாக்கியுள்ளது.
  • உலக மக்கள்தொகையில் 99.7 சதவீதத்தினை உள்ளடக்கிய GPI ஆனது, நம்பகமான ஆதாரங்களில் இருந்து சுமார் 23 தரமான மற்றும் அளவு சார் குறிகாட்டிகளைப் பயன்படுத்துகிறது.
  • இது சமூகப் பாதுகாப்பு மற்றும் காவல், நடைபெற்று வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச மோதல்கள் மற்றும் இராணுவமயமாக்கல் என மூன்று களங்களில் அமைதி நிலையை மதிப்பிடுகிறது.
  • 2025 ஆம் ஆண்டில் உலகளாவிய அமைதியின் சராசரி நிலை 0.36% என்ற அளவிற்கு குறைந்து, தொடர்ந்து ஆறாவது ஆண்டாக மோசமடைவதைக் குறிக்கிறது.
  • 2.229 என்ற GPI மதிப்புடன் 163 நாடுகளில் இந்தியா 115 வது இடத்தில் உள்ளது.
  • இது 2024 ஆம் ஆண்டில் இருந்ததை விட 0.58% முன்னேற்றத்தைக் காட்டுகிறது (116வது இடம்).
  • உலகளவில் பாதுகாப்பான நாடான ஐஸ்லாந்து, அனைத்து களங்களிலும் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது.
  • உலகின் மிகக் குறைந்த அளவு அமைதியான நாடு ரஷ்யா ஆகும்.
  • இந்தக் குறியீட்டில் வங்க தேசம் 123வது இடத்திலும், பாகிஸ்தான் 144வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 158வது இடத்திலும் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்