உலகளாவிய காடழிப்பு 2025 ஆம் ஆண்டில் 15% குறைந்துள்ளதாக வன அறிவிப்பு மதிப்பீடு 2026 தெரிவித்துள்ளது, ஆனால் 2030 ஆம் ஆண்டிற்குள் வன இழப்பைத் தடுத்து நிறுத்தி அதனை மாற்றுவதற்கான பாதையில் உலகம் இன்னும் பின் தங்கி உள்ளது.
2025 ஆம் ஆண்டில் சுமார் 7 மில்லியன் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டன, இதனால் 2021 ஆம் ஆண்டிலிருந்து குறைப்பு இலக்குக்கு எதிராக 10.7 மில்லியன் ஹெக்டேர் ஒட்டு மொத்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
வெப்பமண்டல லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள் காடழிப்பை 2018-2020 ஆம் ஆண்டுகளில் அடிப்படை அளவை விட 33% ஆகக் குறைத்துள்ளன, அதே சமயம் வெப்பமண்டல ஆப்பிரிக்காவில் காடழிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2024 ஆம் ஆண்டில், 65.4 மில்லியன் ஹெக்டேர் காடுகள் சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டில் சரிவைச் சந்தித்தன, இது வன வளம் மற்றும் செயல்பாட்டிற்கு ஏற்பட்ட சேதத்தை குறிக்கிறது.
வனப் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு 2024 ஆம் ஆண்டில் 6 பில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டுமே பெற்றது, இது உலகளாவிய பருவநிலை நிதியில் 0.3% ஆகும்.
குன்மிங்-மாண்ட்ரீல் உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பின் கீழ் 2030 ஆம் ஆண்டிற்குள் 30% பாதுகாப்பு இலக்குக்குக் கீழே, பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உலகின் நிலப்பரப்பு மற்றும் உள்நாட்டு நீர்ப் பகுதிகளில் 17.33% ஐ உள்ளடக்கியுள்ளன.