ஐஎம்டியின் உலகளாவிய திறன்களுக்கான தரவரிசையின் சமீபத்திய பதிப்பின் படி, மொத்தமுள்ள 63 நாடுகளைக் கொண்ட பட்டியலில் இந்தியா 59வது இடத்தில் உள்ளது (இதற்கு முன்பு 53வது இடம்).
இந்தக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசையின் வீழ்ச்சிக்கான காரணங்கள் – குறைவான வாழ்க்கைத் தரம், கல்விக்கான செலவு, அறிவு மிக்கவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதன் மூலம் ஏற்படும் எதிர்மறையான தாக்கம் மற்றும் திறமைகளை ஈர்த்து அதைத் தக்க வைத்துக் கொள்வதில் குறைந்த முன்னுரிமை.
உலகின் சிறந்த திறன் மிக்கவர்களின் மையமாக சுவிட்சர்லாந்து தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து இந்தக் குறியீட்டில் டென்மார்க் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் உள்ளன.
இந்தத் தரவரிசையில் முதலிடங்களில் உள்ள நாடுகள் கல்வி மற்றும் உயர்தர வாழ்க்கை முறை ஆகியவற்றில் அதிகமான முதலீடுகளை மேற்கொள்கின்றன.