TNPSC Thervupettagam

உலகளாவிய மேம்பாட்டு நிதியளிப்பு அறிக்கை 2026

April 13 , 2026 3 days 70 0
  • மேம்பாட்டுக்கான உலகளாவிய நிதியளிப்புச் சவால்களை எடுத்துரைக்கும் இந்த அறிக்கையை ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை (UN DESA) வெளியிட்டுள்ளது.
  • இது பலவீனமான உலகப் பொருளாதாரம், குறைந்த வருமான அளவுகள் மற்றும் வளரும் நாடுகளில் உள்ள அதிக கடன் வாங்கும் செலவுகள் போன்ற சிக்கல்களை சுட்டிக்காட்டுகிறது.
  • இது நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான (SDGs) நிதியளிப்பில் $4 டிரில்லியன் டாலர் இடைவெளி இருப்பதை குறிப்பிடுகிறது.
  • உள்நாட்டு நிதி, தனியார் துறை வளர்ச்சி மற்றும் மீள்திறன் கொண்ட நிதி அமைப்புகளை வலுப்படுத்துவதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது.
  • இது உலகளாவிய நிதியளிப்பை மேம்படுத்துவதற்காக என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட செவில்லா உறுதிப்பாட்டை சிறப்பித்துக் காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்