மத்திய கிழக்கு மோதலின் ஆசிய-பசிபிக் மீதான தாக்கங்கள்
April 17 , 2026 107 days 201 0
ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டமானது (UNDP), "Military Escalation in the Middle East: Human Development Impacts Across Asia and the Pacific" என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டது.
மத்திய கிழக்கில் ஏற்படும் இராணுவ விரிவாக்கம் ஆசியா மற்றும் பசிபிக் முழுவதிலும் உள்ள மனித வளர்ச்சியைப் பாதிக்கிறது என்பதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
உயர்ந்து வரும் எரிபொருள் போக்குவரத்து மற்றும் உள்ளீட்டுச் செலவுகள் வாங்கும் திறனைக் குறைத்து உணவுப் பாதுகாப்பின்மையை அதிகரிக்கின்றன மற்றும் அரசாங்க வரவு செலவுத் திட்டங்களில் நெருக்கடியை ஏற்படுத்துகின்றன.
பதற்றத்தைத் தணிக்கும் வகையில் பாகிஸ்தானின் ஆதரவுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று நடைமுறைக்கு வந்தது.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் உற்பத்தி இழப்புகள் $97-299 பில்லியன் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.3-0.8%) என மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் தெற்காசியா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 8.8 மில்லியன் மக்கள் வறுமையில் தள்ளப்படலாம், ஈரானில் இதன் முக்கிய தாக்கம் இருக்கும்.
குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்கள் அதிக வேலையின்மையை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் மோதல் தொடர்ந்தால் மனித வளர்ச்சி முன்னேற்றம் கணிசமாகக் குறையக் கூடும்.