மேம்பாட்டுக்கான உலகளாவிய நிதியளிப்புச் சவால்களை எடுத்துரைக்கும் இந்த அறிக்கையை ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை (UN DESA) வெளியிட்டுள்ளது.
இது பலவீனமான உலகப் பொருளாதாரம், குறைந்த வருமான அளவுகள் மற்றும் வளரும் நாடுகளில் உள்ள அதிக கடன் வாங்கும் செலவுகள் போன்ற சிக்கல்களை சுட்டிக்காட்டுகிறது.
இது நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான (SDGs) நிதியளிப்பில் $4 டிரில்லியன் டாலர் இடைவெளி இருப்பதை குறிப்பிடுகிறது.
உள்நாட்டு நிதி, தனியார் துறை வளர்ச்சி மற்றும் மீள்திறன் கொண்ட நிதி அமைப்புகளை வலுப்படுத்துவதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது.
இது உலகளாவிய நிதியளிப்பை மேம்படுத்துவதற்காக என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட செவில்லா உறுதிப்பாட்டை சிறப்பித்துக் காட்டுகிறது.