உலகளாவியக் காற்றாற்றல் சபை (GWEC) ஆனது இந்தப் புதியதொரு மதிப்பீட்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
தற்போதைய வளர்ச்சிக் கணிப்புகள், 2030 ஆம் ஆண்டிற்குள் நிகரச் சுழிய அளவிலான உமிழ்விற்கான சாத்தியமான வழியைப் பேணுவதற்காக தேவைப்படும் நிறுவப்பட்ட திறனில் சுமார் 77 சதவீதத்தை மட்டுமே இந்தத் துறையானது வழங்கும் என்பதைக் குறிப்பிடுகின்றன.
2024 ஆம் ஆண்டில், உலகளவில் 117 ஜிகாவாட் புதிய காற்றாற்றல் உற்பத்தி திறன் அலகுகள் நிறுவப் பட்டது என்ற நிலையில் இது 2023 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 116.6 ஜிகாவாட்டிலிருந்து ஒரு சிறிய அதிகரிப்பு ஆகும்.
மொத்த உலகளாவியக் காற்றாற்றல் மின் உற்பத்தித் திறன் ஆனது தற்போது 1,136 ஜிகாவாட்டாக உள்ளது.
அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் ஜெர்மனி ஆகியவை ஐந்து முன்னணிக் காற்றாற்றல் சந்தைகளில் இடம் பெற்றுள்ளன.
2024 ஆம் ஆண்டில், சுமார் 79,824 மெகாவாட் (MW) திறன் கொண்ட புதிய காற்றாற்றல் நிறுவல்களுடன் சீனா உலகளவில் முன்னிலை வகித்தது.
உஸ்பெகிஸ்தான், எகிப்து மற்றும் சவுதி அரேபியா ஆகியவை காற்றாற்றலை ஏற்றுக் கொண்ட புதிய நாடுகளாக உருவெடுத்தன.
உலகளவில் காற்றாற்றல் மூலம் 56.3 GW ஆற்றல் உற்பத்தி செய்யப்பட்டதுடன் 2024 ஆம் ஆண்டானது, கடல் சார் காற்றாற்றல் உற்பத்தியில் ஒரு திருப்புமுனை ஆண்டாக அமைந்தது.