TNPSC Thervupettagam

உலகளாவியப் பெருங்கடல்களில் ஒளி ஊடுருவல் குறைவு

June 19 , 2025 15 days 63 0
  • கடந்த இருபது ஆண்டுகளில் உலகின் பெருங்கடல்களில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமானவற்றுள் அவற்றின் ஆழப் பகுதிகளுக்கான ஒளி ஊடுருவல் அளவு என்பது கணிசமாக குறைந்துள்ளது.
  • இது முக்கியமாக ஒளி மண்டலங்கள் அல்லது சூரிய ஒளியினைக் கடந்து சென்று ஒளிச் சேர்க்கை செயல்முறையைத் தூண்டக்கூடிய நீர் அடுக்குகளின் பரவல் மீதான ஒரு சுருங்குதலாகும்.
  • சுமார் 200 மீட்டர் ஆழம் வரை நீள்கின்ற ஒளி அடுக்குகள் ஆனது உலகின் கடல்வாழ் உயிரினங்களில் சுமார் 90 சதவீதத்திற்கும் அதிகமானவற்றின் முக்கிய வாழ்வியல் ஆதாரமாகவும் செயல்படுகின்றன.
  • 2003 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், உலகப் பெருங்கடலில் சுமார் 21 சதவீதப் பகுதிகளில் ஒளி ஊடுருவல் குறைந்தது.
  • அதே இருபது ஆண்டு காலப் பகுதியில், உலகப் பெருங்கடலின் கணிசமான பகுதியில் உண்மையில் ஒளி ஊடுருவல் தன்மை அதிகமாகியது.
  • வடக்குக் கடல், கிழக்கு ஐக்கியப் பேரரசு கடற்கரை மற்றும் ஆர்க்டிக் ஆகியவற்றில் வேறு எந்தப் பகுதியையும் விட அதிக ஒளி ஊடுருவல் இழப்பு பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்