உலகின் இரண்டாவது மிகப்பெரிய மீன் உற்பத்தியாளர் - இந்தியா
June 29 , 2026 9 days 77 0
2024 ஆம் ஆண்டில் உலகளாவிய நீர்வாழ் விலங்கு உற்பத்தியில் சுமார் 9% பங்குகளுடன் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்து உள்ளது.
நதிகள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், குளங்கள் மற்றும் சதுப்பு நிலங்களில் இருந்து 2.2 மில்லியன் டன் உற்பத்தி செய்து, உள்நாட்டு மீன் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
உலகளாவிய நீர்வாழ் உயிரி வளர்ப்பு உற்பத்தியில் சுமார் 12% பங்குகளுடன் இந்தியா இரண்டாவது மிகப்பெரிய உற்பத்தியாளராகவும் உள்ளது.
மீன்வளத்துறை சுமார் 30 மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்தை ஆதரிப்பதுடன், உணவுப் பாதுகாப்பு, ஏற்றுமதி மற்றும் விவசாய வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது.
2024 ஆம் ஆண்டில் உலகளாவிய மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரி வளர்ப்பு உற்பத்தி சாதனை அளவாக 235 மில்லியன் டன்களை எட்டியுள்ளது என்று அறிக்கை குறிப்பிட்டு உள்ளது என்பதுடன் இது முக்கியமாக நீர்வாழ் உயிரி வளர்ப்பினால் உந்தப்பட்டுள்ளது.