TNPSC Thervupettagam

உலகின் ஒரே மைசெட்டோமா பாதிப்பு ஆராய்ச்சி மையம்

May 1 , 2025 20 days 51 0
  • உலகின் ஒரே மைசெட்டோமா பாதிப்பு ஆராய்ச்சி மையம் ஆனது, சூடானின் இரண்டு ஆண்டு காலப் போரில் அழிக்கப்பட்டுள்ளது.
  • இந்த மையம் ஆனது, 50 ஆராய்ச்சியாளர்களை உள்ளடக்கியதாகவும், ஒவ்வோர் ஆண்டும் 12,000 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் அளவுக்கு மேம்பட்டிருந்தது.
  • மைசெட்டோமா என்பது விவசாயிகளிடையே மிகவும் பொதுவாகக் காணப்படும் ஒரு புறக்கணிக்கப் பட்ட வெப்பமண்டல நோயாகும்.
  • பாக்டீரியா அல்லது பூஞ்சையால் ஏற்படுகின்ற இந்த மைசெட்டோமா பாதிப்பானது பொதுவாக வெட்டுக் காயங்கள் மூலம் உடலில் நுழைகிறது.
  • தோல், தசை மற்றும் எலும்பை கூட பாதிக்கின்ற இது உடல் திசுக்களைப் படிப்படியாக அழிக்கும் தொற்று நோயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்