TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நன்கொடையாளர் 2025

November 25 , 2025 17 days 84 0
  • ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆனது 2025 ஆம் ஆண்டில் மனிதாபிமான உதவியில் 1.46 பில்லியன் டாலரைப் பங்களித்தது.
  • இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய நன்கொடையாளர் நாடாக ஐக்கிய அரபு அமீரகத்தினை இடம் பெறச் செய்தது.
  • இந்தத் தரவரிசையை, ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் (UN OCHA) உறுதிப்படுத்தியது.
  • ஐக்கிய நாடுகள் சபையால் பதிவு செய்யப்பட்ட, 20.28 பில்லியன் டாலரை எட்டிய மொத்த உலகளாவியப் பங்களிப்புகளில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பங்களிப்பு 7.2% ஆகும்.
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் உதவியைப் பெற்ற முக்கிய நாடுகளில் பாலஸ்தீனம், சூடான், சிரியா, உக்ரைன் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை அடங்கும்.
  • இந்த உதவியில் உணவு, மருந்து மற்றும் தங்குமிடம் போன்ற உடனடி நிவாரணமும், சுகாதாரம், கல்வி, எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் நீண்டகால மேம்பாடு ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்