எண்ணெய் பெருநிறுவனமான சவுதி அராம்கோ, ஆப்பிள் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி, உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக மாறியது.
2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக அராம்கோ நிறுவனம் சுமார் 2.43 டிரில்லியன் டாலர் அளவிலான ஒரு சந்தை மூலதனத்துடன், அதன் மிக உயர்ந்த அளவிலான வர்த்தகத்தினை மேற்கொண்டு ஆப்பிள் நிறுவனத்தை விஞ்சியுள்ளது.
ஐபோன் தயாரிப்பு நிறுவனத்தின் பங்கு மதிப்பானது, 5.2% சரிந்து ஒரு பங்கிற்கு 146.50 டாலராக ஆக முடிவடைந்து, 2.37 டிரில்லியன் டாலர் என்ற மதிப்பை எட்டியது.