புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்கான மத்திய இணை அமைச்சர் பகவந்த் குபா, ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெறும் இன்டர்சோலார் ஐரோப்பா 2022 எனும் நிகழ்வில் கலந்து கொள்கிறார்.
முனிச் நகரில் நடைபெற உள்ள முதலீட்டு ஊக்குவிப்பு நிகழ்வான இந்தியாவின் சூரிய ஆற்றல் சந்தை எனும் நிகழ்வில் இந்திய மத்திய அமைச்சர் ஒரு முக்கிய உரையை ஆற்ற உள்ளார்.
இந்திய-ஜெர்மானிய ஆற்றல் மன்றம் (IGEF) இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறது.