உலகின் முதல் தனியாரால் நிதியளிக்கப்படும் நிலவுத் திட்டம்
February 25 , 2019 2442 days 784 0
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனவெரல் விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் ஒரு இஸ்ரேலிய விண்கலம் விண்ணிற்குச் செலுத்தப்பட்டு இருக்கின்றது.
இது நிலவில் தரையிறங்குவதற்காக இரண்டு மாத கால அளவிற்குப் பயணம் செய்யும்.
தோற்றம் என்ற அர்த்தத்தில் பொருள் கொண்ட ஹீப்ரு வார்த்தையான பெரிஷீட் என்ற பெயரிடப்பட்ட இது துவைக்கும் இயந்திரத்தின் அளவை உடைய ஒரு தானியங்கி தரையிறங்கு வாகனமாகும்.
ஒருவேளை இத்திட்டம் வெற்றியடைந்ததால், நிலவின் மேற்பரப்பின் மீது கட்டுப்படுத்தப்பட்ட தரையிறக்கத்தை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கின்ற ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இஸ்ரேல் இணையும்.