உலகின் முதல் தலைமுறை அளவிலான புகையிலை தடை - மாலத்தீவுகள்
November 7 , 2025 14 days 64 0
2007 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதிக்குப் பிறகு பிறந்த எவரும் புகையிலைப் பயன்படுத்துவதைத் தடை செய்த முதல் நாடாக மாலத்தீவுகள் மாறியுள்ளது.
பாதிக்கப்பட்ட தலைமுறைக்கு சிகரெட் உட்பட அனைத்து விதமானப் புகையிலைப் பொருட்களையும் விற்பனை செய்வதையும் பயன்படுத்துவதையும் இச்சட்டம் தடை செய்கிறது.
நாட்டில் உள்ள அனைத்து வயதினரும் மின் சிகரெட்டுகள்/வேப்பிங் மற்றும் மின்னணு சிகரெட்டுகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வரம்பிற்குட்பட்ட வயதினருக்குப் புகையிலையை விற்கும் சில்லறை விற்பனையாளர்கள் மீது 50,000 மாலத்தீவிய ருஃபியா (சுமார் 2.9 லட்சம் ரூபாய்) அபராதம் விதிக்கப்படும்.
மின் சிகரெட்டுகள் சாதனங்களைப் பயன்படுத்தும் நபர்களுக்கு 5,000 ரூஃபியா (சுமார் ரூ. 29,000) அபராதம் விதிக்கப்படலாம்.
உலகளாவியப் புகையிலைப் பயன்பாட்டு ஒழிப்பு/எண்ட்கேம் இயக்கத்தின் கீழ் புகையிலை இல்லாத தலைமுறை அணுகுமுறையின் ஒரு பகுதியாக இந்தக் கொள்கை உள்ளது.