உள்துறை அமைச்சகத்தின் கீழ் 6 யூனியன் பிரதேச காவல் துறைகள் இணைப்பு
September 29 , 2018 2509 days 759 0
மத்திய உள்துறை அமைச்சகமானது ஆறு யூனியன் பிரதேசங்களின் காவல் துறைகளை இணைப்பதற்கான புதிய விதிகளை அறிவித்துள்ளது.
இந்த விதிகளானது நேரடியாக இந்திய காவல் பணி (IPS – Indian Police Service) அலுவலராக நியமிக்கப்படாத அதிகாரிகளையும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வரம்பிற்குள் 6 யூனியன் பிரதேசங்களில் எந்தொரு இடத்திலும் பணியமர்த்துவதற்கு வழி செய்கிறது.
டெல்லி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள், டாமன் மற்றும் டையூ, தாத்ரா நகர் ஹவேலி மற்றும் சண்டிகர் (காவல் பணி) விதிகள் 2018 ன் கீழ் மத்திய உள்துறை அமைச்சகமானது இதை அறிவித்துள்ளது.
இது, ஒரு மத்திய காவல் பணிநிலைப் பிரிவை உருவாக்குவதற்கான முதல் படியாகும்.