உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்திற்காகப் புதிய பாதைகள்
December 26 , 2020
1611 days
565
- சமீபத்தில் மத்திய அரசானது உள்நாட்டு நீர்வழிப் பாதைகளின் மூலம் படகுப் போக்குவரத்திற்காக வேண்டி புதிய பாதைகளை அடையாளம் கண்டுள்ளது.
- இந்தப் புதிய பாதைகள் ஹசிரா, சோம்நாத் கோயில், ஒக்கா மற்றும் ஜாம்நகர் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன.
- மேலும், சர்வதேசப் பாதைகளில் உள்ள இடங்களும் சாகர்மாலா என்ற திட்டத்தின் கீழ் அடையாளம் காணப் பட்டுள்ளன.
- சாகர்மாலா திட்டமானது 7500 கிலோ மீட்டர் தொலைவுள்ள கடற்கரையைப் பயன்படுத்தி நாட்டில் உள்ள துறைமுகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
- ஏறத்தாழ 6 சர்வதேசப் பாதைகள் இதற்காக அடையாளம் காணப் பட்டுள்ளன.
- இந்தப் பாதைகள் செசல்ஸ், வங்க தேசத்தின் சட்டோகிராம், மடகாஸ்கர் மற்றும் இலங்கையின் ஜாப்னா ஆகிய 4 சர்வதேச இடங்களை உள்ளடக்கியுள்ளது.
- இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையமானது நாட்டின் சரக்குக் கையாளுகைத் திறனை 2021-22 ஆம் ஆண்டில் 100 மில்லியன் டன்களாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.
Post Views:
565