மத்தியத் தொழிலாளர் அமைச்சகமானது 2016 ஆம் ஆண்டினை ஒரு அடித்தளமாகக் கொண்டு ஊதிய விகிதக் குறியீட்டின் புதிய வெளியீட்டினை வெளியிட்டுள்ளது.
பொருளாதார மாற்றங்களின் தெளிவான விவரங்களை வழங்குவதற்கும் ஊழியர்களின் ஊதிய முறையைப் பதிவு செய்வதற்குமான முக்கிய பொருளாதாரக் குறிகாட்டிகளுக்காக ஊதிய விகிதக் குறியீட்டின் அடிப்படை ஆண்டினை அரசு அவ்வப்போது மாற்றி அமைக்கிறது.
2016 ஆம் ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்ட இந்த குறியீடானது (100) 1963-65 ஆம் ஆண்டு வெளியான பழைய வெளியீட்டிற்கு மாற்றாக அமையும்.