உள்நாட்டு விதை உற்பத்தித் துறையில் அதிகளவில் உலக விதைத் தொழில்துறையின் முதலீடுகளை ஈர்க்கும் 6 தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுள் இந்தியாவும் ஒன்றாகும்.
இது விதைகளை அடைதலுக்கான குறியீட்டின் (2021) 3வது பதிப்பின் படி உள்ளது.
இந்தக் குறியீடானது உலக தரப்படுத்துதல் கூட்டணியின் ஒரு பகுதியாக வெளியிடப் பட்டது.
இந்தக் குறியீடானது, சிறு விவசாயிகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கான உலகின் முன்னணி விதை நிறுவனங்களின் முயற்சிகளை மதிப்பிட்டு ஒப்பிடுகிறது.
இதில் 21 நிறுவனங்கள் 9 நாடுகளில் அதன் செயல்முறை மையங்களைக் கொண்டு உள்ளன.