தனியார் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் கிரையோ ஜெனிக் ராக்கெட் எஞ்சின்
November 28 , 2021 1366 days 646 0
ஹைதராபாத்தில் அமைந்துள்ள ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) எனப்படும் விண்வெளி தொழில்நுட்பப் புத்தாக்க நிறுவனமானது தவான் – 1 எனும் ஒரு எஞ்சினை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது.
இது தனியார் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது முழுவதும் கிரையோஜெனிக் தொழில்நுட்பம் கொண்ட ராக்கெட் எஞ்சின் ஆகும்.
இது பயன்பாட்டிற்கு வர உள்ள விக்ரம் – 2 எனும் சுற்றுப்பாதை ஏவு கலத்தின் மேல்நிலைகளுக்கு ஆற்றல் ஊட்டும்.
தவான்-1 என்பது முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சின் ஆகும்.
இது மீவெப்ப உலோகக் கலவைக் கொண்ட முப்பரிமாண அச்சிடல் முறையில் (3D printing with a superalloy) உருவாக்கப்பட்டது.
முப்பரிமாண அச்சிடல் முறையின் பயன்பாடானது சுமார் 95% உற்பத்தி நேரத்தைக் குறைத்துள்ளது.
இந்த எஞ்சின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் திரவ ஆக்சிஜன் கொண்டு எரியூட்டப் படுகிறது.