கி.பி 1 மற்றும் 3 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த, எகிப்தின் மன்னர்களின் பகுதிகளில் கிட்டத்தட்ட 30 தமிழ் பிராமி கல்வெட்டுகள் அடையாளம் காணப் பட்டுள்ளன.
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் போது, தீபன் நெக்ரோபோலிஸில் உள்ள ஆறு கல்லறைகளில் இந்தக் கல்வெட்டுகள் காணப்பட்டன.
அவற்றில் தமிழ் பிராமி, பிராகிருதம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் எழுத்துக்கள் உள்ளன என்ற நிலையில்இது இந்தியப் பயணிகளின் இருப்பைக் குறிக்கிறது.
ஐந்து கல்லறைகளில் சிகை கொற்றன் என்ற மீண்டும் மீண்டும் வரும் பெயர் எட்டு முறை பொறிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்புகள் தமிழகத்திற்கும் ரோமானியப் பேரரசுக்கும் இடையிலான பண்டைய வர்த்தக தொடர்புகளுக்கான சான்றுகளை வழங்குகின்றன.
எகிப்தில் உள்ள செங்கடல் துறைமுகமான பெரெனிகேவிலும் இதே போன்ற தமிழ் பெயர்கள் முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.