TNPSC Thervupettagam

தமிழ்நாடு மின்னணுவியல் மையம்

February 14 , 2026 3 days 45 0
  • தமிழ்நாடு 2030 ஆம் ஆண்டுக்குள் 150 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணுவியல் மையமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2025 நிதியாண்டில் (FY) இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 41% பங்கை தமிழ்நாடு கொண்டிருந்தது என்ற நிலையில் இதன் மதிப்பு $15 பில்லியன் ஆகும் என்பதோடு, மேலும் இது 2026 நிதியாண்டில் 45% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • இந்தியாவின் மின்னணு உற்பத்தி மொத்த விற்பனை மதிப்பில் தமிழ்நாடு 28.6% பங்களிப்பதுடன் இது நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • 2021–22 முதல் 414% அதிகரிப்பைப் பதிவு செய்த தமிழகம் மின்னணுவியல் ஏற்றுமதி $14.65 பில்லியனை எட்டியுள்ளது.
  • சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளியில் முக்கியத் தொழிலகத் தொகுப்புகளைக் கொண்ட தமிழகதில் 191 மின்னணு கருவிகள் உற்பத்தி அலகுகள் உள்ளன.
  • இந்தியாவின் மின்னணுவியல் உற்பத்தித் துறை 2030 ஆம் ஆண்டுக்குள் சுமார் $500 பில்லியனை எட்ட இலக்கு வைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்