வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் திறன்மிகு நகரங்கள் திட்டமானது, 2022 ஆம் ஆண்டின் எண்ணிம இந்தியா விருது விழாவில் "திறன்மிகு நகரங்கள் தரவு : தரவுகள் வழியாக நகரங்களை மேம்படுத்துதல்" என்ற முன்னெடுப்பிற்காக பிளாட்டினம் பரிசினைப் பெற்றுள்ளது.
'தரவுப் பகிர்வு மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கான தரவுப் பயன்பாடு' என்ற பிரிவில் இந்த பரிசானது வழங்கப்பட உள்ளது.
திறன்மிகு நகரங்கள் தரவு என்ற முன்னெடுப்பானது, நகர நிர்வாகங்கள் சான்றுகளின் அடிப்படையிலான தீர்மானங்களை எடுப்பதற்கு வழிவகை செய்யும் ஒரு விரிவான தரவு சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு முக்கியமான படி நிலையாகும்.
இந்தியாவிலுள்ள 100 திறன்மிகு நகரங்களில் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக தரவுகளைப் பயன்படுத்த இந்த முன்னெடுப்பு முயல்கிறது.