TNPSC Thervupettagam

ஏவிஐந்திரா பயிற்சி 2018

December 16 , 2018 2425 days 705 0
  • இந்திய விமானப் படை மற்றும் ரஷ்யாவின் ஏரோஸ்பேஸ் கூட்டமைப்புப் படை ஆகியவற்றுக்கு (Russian Federation Aerospace Force-RFSAF) இடையேயான குறிப்பிட்ட சேவைப் பயிற்சியான ஏவிஐந்திராவானது (AVIAINDIRA) ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள விமானப்படை நிலையத்தில் நடத்தப்பட்டது.
  • இந்த பயிற்சியின் நோக்கமானது இருதரப்பு உறவுமுறைகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் நோக்கி கவனம் செலுத்துவதாகும்.
  • ஏவிஐந்திராவின் தொடக்க பயிற்சியானது 2014 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
  • இந்த பயிற்சியில் அயல்நாட்டுப் பங்கேற்பாளர்கள் தங்கள் விமானங்களை கொண்டு வராமல் பங்கேற்பது இதன் தனித்தன்மையாகும்.
  • இந்தியா மற்றும் ரஷ்யாவிற்கிடையே இரண்டு கட்டமாக நடைபெறும் இந்த ஏவிஐந்திரா 2018 ஆனது இருதரப்புப் பயிற்சியின் இரண்டாவது பாகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்