TNPSC Thervupettagam

ஐஎன்எஸ் ரஞ்சித்

May 6 , 2019 2270 days 817 0
  • இந்திய கடற்படையின் முன்னணி ஏவுகணை அழிப்பு கப்பலான INS ரஞ்சித் தனது 36 ஆண்டுகால சேவைக்குப் பின்னர் ஓய்வு பெற்று விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை கப்பற்தளத்தில் நிறுத்தப்பட்டது.
  • 1983 ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட இது முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் கட்டப்பட்ட ஐந்து காஷின் வகுப்பு அழிப்பு கப்பல்களில் மூன்றாவது கப்பலாகும்.
  • 2019 ஆம் ஆண்டில் ஒரே ஒரு காஷின் வகுப்பு அழிப்பு கப்பல் மட்டுமே ரஷ்யாவின் கடற்படையில் சேவையில் உள்ளது. மற்ற 5 கப்பல்களும் இந்திய கடற்படையிடம் ராஜ்புத் வகுப்பு அழிப்புக் கப்பல்களாக உள்ளன.
  • மொத்தமுள்ள 5 ராஜ்புத் வகுப்பு அழிப்புக் கப்பல்களில் சேவையிலிருந்து நிறுத்தப்படும் முதல் கப்பல் இதுவேயாகும்.
  • இக்கப்பலானது 1979 ஆம் ஆண்டு ஜுன் 16 ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக “சுறுசுறுப்பு” எனும் பொருள்படும் “லவ்க்லி” எனும் ரஷ்ய பெயருடன் தொடங்கப்பட்டது.
  • மேலும் இது இந்திய அமைதிப்படை பிரிவு நடவடிக்கைகள் மற்றும் 1999 ஆம் ஆண்டில் கார்கில் போரின் போதான தல்வார் நடவடிக்கை உட்பட பல முக்கிய நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டது.
ராஜ்புத் வகுப்பு அழிப்பு கப்பல்கள்
  • காஷின் II வகுப்பு அல்லது திட்டம் 61E என அறியப்படும் ராஜ்புத் வகுப்பு அழிப்பு கப்பல்கள் ஆனது சோவியத்தின் காஷின் வகுப்பு அழிப்பு கப்பல்களின் மாற்றியமைக்கப்பட்ட வகைக் கப்பல்களாகும்.
  • இது INS ராஜ்புத், INS ராணா, INS ரஞ்சித், INS ரன்வீர், INS ரன்விஜய் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
  • பிரம்மோஸ் மீயொலி ஏவுகணைகள் முதன்முதலில் ராஜ்புத் வகுப்பு அழிப்புக் கப்பல்களிலேயே பொருத்தப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்