TNPSC Thervupettagam

ஃபானி புயல்

May 6 , 2019 2271 days 797 0
  • அரிதினும் அரிதான வகையைச் சார்ந்ததும் கடுமையான மழைப் பொழிவுக்கு காரணமானதுமான கடுமையான புயலான ஃபானி புயலானது மணிக்கு 240 கிமீக்கும் அதிகமான வேகத்தில் ஒடிசாவின் கடற்கரையோரப் பகுதிகளை கடந்த மே 03 ஆம் தேதி தாக்கியது.
  • இது வலுவிழந்து மேற்கு வங்காளத்திற்குள் நுழைவதற்கு முன்னதாக ஒடிசாவில் மிகப்பெரிய அளவில் கட்டமைப்புகளின் சேதத்திற்கு காரணமானது.
  • இந்திய வானிலை ஆராய்ச்சி மையமானது, ஃபானி புயலை மிகவும் கடுமையான புயல் காற்று என வகைப்படுத்தியுள்ளது.
  • இந்தப் புயலுக்கு ஃபானி எனும் பெயர் வங்காள தேசத்தினால் பரிந்துரைக்கப்பட்டது. ஃபானி என்றால் பாம்பு என்று பொருள்.
  • இந்திய வானிலை ஆய்வு மையத்தின் “கிட்டத்தட்ட மிக துல்லியமான” எச்சரிக்கைகளே நிர்வாக அதிகாரிகளின் நன்கு திட்டமிடப்பட்ட மக்களை வெளியேற்றும் திட்டங்களுக்கு உதவி புரிந்து உயிரிழப்பை குறைக்க உதவியது என பேரிடர் குறைப்பிற்கான ஐ.நாவின் நிறுவனமானது கருத்து தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்