TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சபையின் மகளிர் அமைதிக் காப்புப்படைகளின் மிகப்பெரிய படைப்பிரிவு

January 9 , 2023 952 days 413 0
  • சூடானில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் தூதுக் குழுவிற்கான அமைதிக் காப்பு மகளிர் படைப் பிரிவினை இந்திய அரசு அனுப்ப உள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் தூதுக் குழுவில் இடம் பெறும் இந்திய மகளிர் அமைதிக் காப்புப் படைப் பிரிவின் மிகப்பெரிய ஒற்றைப் படைப் பிரிவாக இது விளங்கும்.
  • இந்தியா முதன்முதலில் தனது அனைத்து மகளிர் படைப் பிரிவினை 2007 ஆம் ஆண்டில் லைபீரியாவில் நிலை நிறுத்தியது.
  • ஐக்கிய நாடுகள் அமைதி காப்பு திட்டம் என்பது அமைதி நடவடிக்கை துறைக்கும் செயல்பாட்டு ஆதரவு வழங்கீட்டுத் துறைக்கும் இடையிலான ஒரு கூட்டு முயற்சி ஆகும்.
  • இந்தத் திட்டத்தினைச் செயல்படுத்தும் நாடுகளுக்கு மோதல்கள் நிறைந்த சூழ்நிலைகளில் இருந்து அமைதி நிலைக்கு மாறச் செய்வதற்கு உதவச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக் காப்புப் பணிகளில் 12 பணிகளில் ஈடுபடுத்தப் பட்டதுடன், இந்தியா வங்காளதேசத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரியப் பங்களிப்பு நாடாகத் திகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்