ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானம் 2615
December 27 , 2021 1321 days 618 0
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையானது, ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு மனிதநேய உதவிகளை வழங்குவதற்கு அனுமதிப்பதற்காக வேண்டி, தாலிபன் அமைப்பிற்கு எதிராக விதிக்கப்பட்ட சில பொருளாதாரத் தடைகளை நிறுத்த அனுமதிக்கும் ஒரு தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அவசரமாகத் தேவைப்படும் மனித நேய உதவிகள் மற்றும் அடிப்படை மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பிற செயல்பாடுகளுக்கும் இந்தத் தடை நிறுத்தம் பொருந்தும்.
ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு முறை இந்தத் தடை நிறுத்தத்தினை மறு ஆய்வு செய்ய வேண்டும் என இந்தத் தீர்மானம் (2615) வலியுறுத்துகிறது.
ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர், உதவி வழங்கீடு பற்றியும், செயலாக்கத்தின் இடையில் ஏதேனும் தடைகள் இருந்தால் அது பற்றியும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அது கோருகிறது.
மனித உரிமைகளை மதிக்கவும் சர்வதேச மனிதநேயச் சட்டத்தை கடைபிடிக்கவும் வேண்டி "அனைத்துத் தரப்பினருக்கும் இத்தீர்மானம் அழைப்பு விடுக்கிறது".