TNPSC Thervupettagam

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் கரு

December 26 , 2021 1322 days 547 0
  • தெற்கு சீனாவில் உள்ள கன்சோ எனுமிடத்தில் 66 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் கரு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
  • இந்தக் கருவானது ஒரு பல் இல்லாத தெரோபாட் டைனோசர் அல்லது ஓவிரா ப்டோரோசர் ஆக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
  • தற்கு பேபி யிங்லியாங் என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்தக் கருவின் கண்டுபிடிப்பானது டைனோசர்களுக்கும் நவீன காலத்தியப் பறவைகளுக்கும் இடையிலான ஒரு தொடர்பைப் பற்றியக் கூடுதல் புரிதலையும் ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கியுள்ளது.
  • இந்தப்  புதைபடிவமானது, கரு "மடிந்த நிலை" எனப்படும் ஒரு சுருண்ட நிலையில் இருந்தது என்ற தகவலையும் வழங்குகிறது.
  • பறவைகள் மத்தியில் காணப்படும் இந்த நடத்தையானது, அவை குஞ்சு பொரிக்கச் செய்வதற்கு முந்தைய நிலை என்று கருதப்படுகிறது.
  • நவீனப் பறவைகளின் மடிந்த நிலை என்பது அவற்றின் டைனோசர் வகையிலான மூதாதையர்களிடமிருந்து உருவாகி பரிணாம வளர்ச்சியடைந்தது என்பதையும் இது குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்