ஐநா சபையின் பெருங்கடல் மாநாடு 2025 – முன்னெடுப்புகள்
June 22 , 2025 12 days 68 0
3வது ஐக்கிய நாடுகள் சபையின் பெருங்கடல் மாநாடு (UNOC3) ஆனது சமீபத்தில் பிரான்சின் நைஸ் நகரில் நிறைவடைந்தது.
இந்த நிகழ்வின் போது, One Ocean Finance மற்றும் அமைதியானப் பெருங்கடலுக்கான உயர் இலட்சியக் கூட்டணி ஆகியவை தொடங்கப்பட்டன.
One Ocean Finance என்பது கடல்சார் பொருளாதாரத் துறைகள் மற்றும் பெருங்கடல் மறு சீரமைப்பிற்காக பில்லியன் கணக்கான நிலையான நிதியைத் திரட்டுவதற்கான ஒரு உலகளாவிய நிதி சார் முன்னெடுப்பாகும்.
ஓர் அமைதியான பெருங்கடலுக்கான கூட்டணி என்பது அந்தப் பெருங்கடலின் ஒலி மாசுபாட்டைக் குறைப்பதற்கும் அங்கு கடல் சார் பல்லுயிர்ப் பெருக்கத்தில் அதன் தீங்கு விளைவிக்கும் தாக்கங்களைக் குறைப்பதற்கும் உறுதி பூண்டுள்ளது.
கனடா மற்றும் பனாமாவால் தொடங்கப்பட்ட இது 35 இதர நாடுகளால் ஆதரிக்கப் பட்டது.