ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பானது 2022 ஆம் ஆண்டில் தனது 50வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.
1972 ஆம் ஆண்டில் நடைபெற்ற மனித சுற்றுச்சூழல் பற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஐ.நா. மாநாட்டினைத் தொடர்ந்து இது நிறுவப்பட்டது.
இந்த அமைப்பின் முக்கிய அறிக்கைகளாவன; உமிழ்வு இடைவெளி அறிக்கை, உலக சுற்றுச்சூழல் கண்ணோட்ட அறிக்கை, வரம்புகள் (பிரான்டைர்ஸ்) அறிக்கை, வளமான புவிக்காக முதலீடு செய்தல் ஆகியனவாகும்.
இந்த அமைப்பு மேற்கொண்ட முக்கியப் பிரச்சாரங்கள்; மாசுபாட்டினை எதிர்த்துச் செயல்படுதல், UN75, உலக சுற்றுச்சூழல் தினம், வைல்டு ஃபார் லைஃப் (Wild for Life) என்பனவாகும்.