TNPSC Thervupettagam

ஐ.நா நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறியீடு 2026

July 4 , 2026 3 days 89 0
  • 2026 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் (UN) நீடித்த வளர்ச்சி இலக்குகள் (SDG) குறியீட்டில், இந்தியா 94-வது இடத்திற்கு (மதிப்பெண் 68.3/100) முன்னேறியுள்ளது; இது இதுவரை இல்லாத மிக உயர்ந்த நிலையாகும்.
  • 2015ம் ஆண்டிலிருந்து இந்தியா 18 இடங்கள் முன்னேறியுள்ளது ஆயினும் தெற்காசியாவில் பூட்டான், மாலத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்குப் பின்னாலேயே உள்ளது.
  • 17 நீடித்த வளர்ச்சி இலக்குகளில் 13 இலக்குகளில் இந்தியா சவால்களை எதிர் கொள்வதாகவும், 2030-ஆம் ஆண்டிற்கான இலக்குகளை அடைவதற்கான பாதையில் இல்லை எனவும் இவ்வறிக்கை கூறுகிறது.
  • பசியின்மை (SDG 2), நல்ல ஆரோக்கியம் (SDG 3), பாலின சமத்துவம் (SDG 5), பருவநிலை நடவடிக்கை (SDG 13), மற்றும் அமைதி, நீதி மற்றும் வலுவான நிறுவனங்கள் (SDG 16) ஆகியவை முக்கிய கவலைக்குரிய இலக்குகளாகும்.
  • மின்சார அணுகல் (SDG 7) மற்றும் டிஜிட்டல் இணைப்பு (SDG 9) ஆகியவற்றில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்