ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆனது கார்பன் எல்லைச் சீரமைப்புச் செயல்முறையை (CBAM) தொடங்கியது.
CBAM ஆனது எஃகு, அலுமினியம், சிமெண்ட், இரசாயனங்கள், காகிதம், கண்ணாடி, உரங்கள் மற்றும் மின்சாரத் துறைப் பொருட்களின் இறக்குமதிக்கு கார்பன் வரியை விதிக்கிறது.
உற்பத்தியில் வெளியாகும் அதிக கார்பன் உமிழ்வு காரணமாக எஃகு, இரும்பு மற்றும் அலுமினியத்தின் இந்திய ஏற்றுமதிகள் பாதிக்கப் படுகின்றன.
பெரும்பாலான இந்திய எஃகு ஊது உலை–அடிப்படை ஆக்ஸிஜன் உலை (BF–BOF) முறையில் தயாரிக்கப்படுகிறது என்பதோடு இது அதிக உமிழ்வை உருவாக்குகிறது.
தூய்மையான எஃகு உற்பத்தியானது எஃகுக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மின்சார விற்பொறி உலை (EAF) வழித்தடத்தைப் பயன்படுத்துகிறது.
CBAM ஆனது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான செலவுகளை அதிகரிக்கக் கூடும் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களை (MSME) அதிகம் பாதிக்கக் கூடும்.