TNPSC Thervupettagam

ஐரோப்பிய ஒன்றியம் - கனடா இணை உறுப்பினர் அந்தஸ்து

September 18 , 2026 2 days 47 0
  • ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் "இணை உறுப்பினராக" கனடா மாறுவதற்கான முன்மொழிவுகளுக்கு ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
  • இந்த முன்மொழியப்பட்ட அந்தஸ்தானது தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI), பாதுகாப்பு, எரிசக்தி, முக்கியமான கனிமங்கள் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா இடையேயான ஒத்துழைப்பை ஆழமாக்கும்.
  • "இணை உறுப்பினர்" என்பது தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் வகைகளில் இல்லை, மேலும் இதனை நிறுவ பல ஆண்டுகள் ஆகலாம்.
  • அமெரிக்காவுடனான வர்த்தகப் பதட்டங்களுக்கு மத்தியில் கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு "தனித்துவமான கூட்டணியை" நாடியுள்ளது.
  • கனடா, இங்கிலாந்து மற்றும் உக்ரைன் போன்ற கூட்டாளர்களை உள்ளடக்கிய ஐரோப்பியப் பாதுகாப்பு சபை ஒன்றை அமைப்பதற்கும் வான் டெர் லேயன் முன்மொழிந்துள்ளார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்