ஒரு ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தான ஐவர்மெக்டினைக் கொண்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க உள்ளதாக இரண்டு இந்திய மாநிலங்கள் தெரிவித்துள்ளன.
மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் உள்ள கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையானது அளவை மிஞ்சி அதிகரித்து வருவதால் இந்தத் தீவிரமான கோவிட்-19 தொற்றிலிருந்துப் பாதுகாத்து கொள்வதற்காக வேண்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது.
கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
மருத்துவ சோதனைகளைத் தவிர்த்து ஐவர்மெக்டின் மருந்தினை கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தக்கூடாது என உலக சுகாதார அமைப்பானது பரிந்துரைத்துள்ளது.
இந்த மருந்தின் செயல்திறனை நிரூபிப்பதற்கு போதுமான எந்தவொரு தகவல்களும் முறையான சான்றுகளும் இல்லை என்பதால் இந்த மருந்தை உபயோகிக்கக் கூடாது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
ஐவர்மெக்டின் மருந்தானது ஆன்கோசெர்சியாசிஸ் மற்றும் ஃபைலேரியாசிஸ் (Onchocerciasis and filariasis) ஆகிய இரு உயிர்க்கொல்லி நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் அவற்றை முற்றிலுமாக ஒழிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.