ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்லோவேனியா - இந்தியக் குடியரசுத் தலைவர் பயணம்
September 14 , 2019 2300 days 750 0
இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்காவிக் நகரில் நடத்தப்பட்ட இந்தியா - ஐஸ்லாந்து வர்த்தக மன்றத்தில் உரையாற்றினார்.
அவர் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை ஐஸ்லாந்தின் ரெய்காவிக் நகருக்கு 3 நாள் அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ளார்.
இது ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்லோவேனியாவுக்கான இந்தியக் குடியரசுத் தலைவரின் அரசு முறைப் பயணத்தின் ஒரு பகுதியாகும்.
2005 ஆம் ஆண்டில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பயணம் செய்த பின்னர் ஐஸ்லாந்துக்கு ஒரு இந்திய குடியரசுத் தலைவர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.