மோ பேருந்து என்பது ஒடிசாவின் தலைநகர் மண்டல நகர்ப்புறப் போக்குவரத்து (CRUT) ஆணையத்தின் பேருந்துச் சேவையாகும்.
இது ஐக்கிய நாடுகள் சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்திரப் பொதுச் சேவை விருதுகளைப் பெற்ற 10 உலக சேவைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மோ பேருந்துச் சேவையானது நேரடிக் கண்காணிப்பு, பயணத் திட்டமிடல் மற்றும் இணைய வழிப் பயணச் சீட்டு போன்ற பல்வேறு நிகழ்நேரத் தொழில்நுட்பங்களை இதில் இணைத்து உள்ளது.
மேலும், தொலைதூரப் போக்குவரத்துச் சேவையாக ‘மோ இ-ரைடு’ என்ற இணையவழி ரிக்சா அமைப்பு இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.