உத்தரப் பிரதேச மாநிலத்தினைச் சேர்ந்த 1981 ஆம் ஆண்டு பணிப் பிரிவினைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான பரமேஸ்வரன் ஐயர், நிதி ஆயோக் அமைப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜூன் 30 ஆம் தேதியன்று அமிதாப் காந்த் அவர்களின் பதவிக் காலம் நிறைவு அடைந்ததையடுத்து அவருக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்
இவர் குறைந்தது இரண்டு ஆண்டுகள் வரை இப்பதவியில் இருப்பார்.
இவர் ஸ்வச் பாரத் அபியான் திட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
தற்போது, இவர் நீர் வளப் பாதுகாப்புக்காக உலக வங்கியினால் மேற்கொள்ளப்படும் தளமான 2030 ஆம் ஆண்டு நீர்வளக் குழுமத்தின் திட்ட மேலாளராகச் செயல்படுகிறார்.
செயலாளர் பதவியில் இருக்கும் ஒருவரை இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) பிரதமர் அவர்கள் நியமிக்கிறார்.
அமைச்சரவையின் நியமனக் குழு இவரை இப்பதவிக்கு நியமிப்பதற்கு அனுமதி வழங்கியது.