சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு வீத வரி நீட்டிப்பு
June 29 , 2022 1115 days 467 0
மத்திய அரசானது சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு வீத வரியினை விதிக்கச் செய்வதற்கான காலக் கெடுவினை 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இந்த வீத வரி விதிப்பு முறையானது 2022 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதியோடு முடிவடையத் திட்டமிடப் பட்டது.
இருப்பினும், சரக்கு மற்றும் சேவை வரிச் சபையானது இதனை மேலும் நீட்டிக்க முடிவு செய்தது.
சரக்கு மற்றும் சேவை வரியானது இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
சரக்கு மற்றும் சேவை வரியினை அமல்படுத்திய 5 ஆண்டுகளுக்குப் பிறகு, மாநிலங்களுக்கு ஏதேனும் வருவாய் இழப்பு ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு வழங்கப் படும் என உறுதி அளிக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி (மாநிலங்களுக்கு இழப்பீடு) சட்டத்தின் கீழ் இழப்பீட்டு வீத வரி வழங்கும் விதிமுறை உருவாக்கப்பட்டது.
ஒவ்வொரு மாநிலத்தின் சரக்கு மற்றும் சேவை வரி வருவாயில், 2015-16 ஆம் ஆண்டில் வசூலிக்கப்பட்ட தொகையில் இருந்து 14 சதவீதம் உயர்வு ஏற்படும் என்று இந்தச் சட்டம் கருதுகிறது.
எந்தவொரு ஆண்டிலும் ஒரு மாநிலம் 14 சதவீதத்திற்கும் குறைவாக வரி வசூலித்து இருந்தால், அந்தப் பற்றாக்குறை அளவிற்கு வரியிழப்பு ஈடு செய்யப்படும் என்று இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டது.
இந்தத் தொகையானது, தற்காலிகக் கணக்குகளின் அடிப்படையில், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை செலுத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
இழப்பீட்டு வீத வரி நிதி என்பது மாநிலங்களுக்கு ஏதேனும் வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டால் அதைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டது.