அண்மையில், ஒரு சூரியன் ஒரு உலகம் ஒரு கட்டமைப்பு என்ற திட்டத்தை வெளியிடுவதற்கு வேண்டி இந்த திட்டத்தில் பங்கேற்க விரும்பும் நாடுகளுக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதன் பின்னணியில் உள்ள நோக்கம் ‘சூரியன் ஒருபோதும் மறைவதில்லை’ என்பதாகும்.
இது உலக வங்கியின் தொழில்நுட்ப உதவித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இந்த முயற்சியின் மூலம் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகமானது மேற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பரவியிருக்கும் 140க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள சூரிய ஒளி வளங்களைப் பகிர்ந்து கொள்வது குறித்து ஒரு உலகளாவிய ஒருமித்த கருத்தை உருவாக்க திட்டமிட்டு உள்ளது.