TNPSC Thervupettagam

ஒரு தேசம் ஒரு குடும்ப அட்டைத் திட்டம்

June 3 , 2020 1798 days 663 0
  • சிக்கிம், ஒடிசா மற்றும் மிசோரம் ஆகிய மேலும் 3 மாநிலங்களும் ஒருங்கிணைந்தப் பொது விநியோக அமைப்பு (PDS - Public Distribution System) மேலாண்மை முறையில் சேர்ந்துள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சரான ராம் விலாஸ் பஸ்வான் அறிவித்துள்ளார்.
  • ஒருங்கிணைந்த PDS மேலாண்மை முறையின் மூலம், இந்திய அரசானது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பயன்களைக் கொண்டு சேர்க்க முயற்சித்து வருகின்றது.
  • இந்தத் திட்டமானது நாட்டில் எந்தவொரு இடத்திலும் வசிக்கும் இந்தியக் குடிமக்களுக்கு உணவு தானியங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதுவரை இந்தத் திட்டமானது 17 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் செயல்படுத்தப் பட்டுள்ளது.
  • வரும் ஆகஸ்ட் மாதத்தில் மணிப்பூர், உத்தரகாண்ட் மற்றும் நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களும் இந்தத் திட்டத்தில் இணைய இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்