TNPSC Thervupettagam

MSME (சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்) வரையறை

June 3 , 2020 1798 days 978 0
  • MSME மீதான வரையறையில் ஏற்படுத்தப்பட உள்ள மாற்றங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • 2006 ஆம் ஆண்டில் MSME மேம்பாட்டுச் சட்டம் நடைமுறைக்கு வந்து 14 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்பொழுது இது திருத்தியமைக்கப் பட்டுள்ளது.
  • புதிய வரையறையின்படி, ரூ. 1 கோடி மற்றும் 5 கோடி முதலீடு கொண்ட MSMEகள் குறு நிறுவனங்கள் என்று வகைப்படுத்தப் பட்டுள்ளன.
  • ரூ.10 கோடி மற்றும் ரூ.50 கோடி என்ற அளவில் வருடாந்திர விற்று முதல் கொண்ட MSMEகள் சிறு நிறுவனங்கள் என்று வகைப்படுத்தப் பட்டுள்ளன.
  • ரூ.50 கோடி மற்றும் அதற்கு மேல் என்ற அளவில் வருடாந்திர விற்று முதல் கொண்ட MSMEகள் நடுத்தர நிறுவனங்கள் என்று வகைப்படுத்தப் பட்டுள்ளன.
  • நாட்டில் 60 மில்லியனுக்கும் மேற்பட்ட MSMEகள் உள்ளன.
  • இவை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29% என்ற அளவிற்குப் பங்களிக்கின்றன. இவை 110 மில்லியன் (அ) 11 கோடி வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன.
  • இவை நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் பாதிக்கும் மேற்பட்ட ஏற்றுமதிக்குப் பங்களிப்பு செய்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்