TNPSC Thervupettagam

ஒரு வழக்கு ஒரு தரவு முயற்சி

May 16 , 2026 16 days 93 0
  • இந்தியத் தலைமை நீதிபதி (CJI) ‘ஒரு வழக்கு ஒரு தரவு’ முயற்சியையும், ‘சு சஹாய்’ என்ற செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் ஒரு உரையாடல் மென் பொருளையும் (chatbot) தொடங்கி வைத்தார்.
  • இது, இந்திய நீதித்துறையின் அனைத்து மட்டங்களிலுமுள்ள நீதித்துறைத் தகவல்களை ஒரே, ஒருங்கிணைந்த அமைப்பில் ஒன்றிணைப்பதற்காக வடிவமைக்கப் பட்ட ஒரு பெரிய டிஜிட்டல் உள்கட்டமைப்புத் திட்டமாகும்.
  • பல்வேறு நீதிமன்ற அடுக்குகளின் பதிவுகளை இணைப்பதன் மூலம் தரவுப் பிளவுகளை நீக்கி, அதன்மூலம் நீதித்துறைச் செயல்பாட்டின் வேகத்தையும் வெளிப்படைத் தன்மையையும் மேம்படுத்தி, ஒரு திறமையான தேசிய வழக்கு மேலாண்மை அமைப்பை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
  • சு சஹாய்’ என்பது இந்திய உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் நேரடியாக ஒருங்கிணைக்கப் பட்ட, செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ஒரு உதவி உரையாடல் மென்பொருளாகும்.
  • இது தேசிய தகவல் மையத்தால் (NIC), உச்ச நீதிமன்றப் பதிவகத்துடன் இணைந்து உருவாக்கப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்