TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த போர் குழுக்கள்

July 4 , 2026 4 days 72 0
  • இந்திய ராணுவம் தனது முதல் 'ஒருங்கிணைந்த போர் குழுக்களை' (IBGs) 2026 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் மேற்கு வங்கத்தின் பனகரில் உள்ள XVII படையின் (மலைப் பாங்குத் தாக்குதல் படை) கீழ் பயன்பாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.
  • IBG என்பது காலாட்படை, பீரங்கிப்படை, பொறியாளர்கள், சமிக்ஞைகள், வான் பாதுகாப்பு, தளவாடங்கள் மற்றும் மருத்துவப் பிரிவுகள் ஆகியவற்றை ஒரே தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கும் 5,000-க்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்ட பிரிகேட்/படைப்பிரிவு அளவிலான, தற்சார்புடைய ஒரு போர்ப் படையாகும்.
  • குறிப்பாக மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் உள்ள சீன எல்லையில் படைகளை விரைவாகத் திரட்டுவதற்கும் (48 மணி நேரத்திற்குள்) மற்றும் தாக்குதல், தற்காப்பு நடவடிக்கைகளுக்காகவும் IBG-கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • இந்தக் கருத்துரு ஜெனரல் பிபின் ராவத்தால் முன்மொழியப்பட்டு, 2019-ஆம் ஆண்டில் IX படை மற்றும் ஹிம்விஜய் பயிற்சியின் போது முதன்முதலில் சோதிக்கப்பட்டது.
  • ருத்ரா பிரிகேடுகள்/படைப்பிரிவுகள், பைரவ் பட்டாலியன்கள், திவ்யாஸ்த்ரா பேட்டரிகள் மற்றும் சக்திபான் பிரிவுகளுடன் இணைந்து, தனது பரந்த படை நவீன மயமாக்கலின் ஒரு பகுதியாக 2029 ஆம் ஆண்டிற்குள் IBG ஆக்கத்தை முடிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்