TNPSC Thervupettagam

கங்கோத்ரி பனிப்பாறை

September 5 , 2025 15 hrs 0 min 26 0
  • பருவநிலை மாற்றம் காரணமாக கங்கோத்ரி பனிப்பாறையில் முன்கூட்டியே பனி உருகுதல் ஏற்பட்டுள்ளது என்பதோடு இது பாகீரதி நதிப் படுகையின் நீர் சுழற்சியை மாற்றுகிறது.
  • மத்திய இமயமலையில் பாகீரதி நதிக்கு நீர் அளிக்கும் மேல் மட்ட கங்கைப் படுகையின் மூலமாக கங்கோத்ரி பனிப்பாறை அமைப்பு (GGS) உள்ளது.
  • 1980 முதல் 2020 ஆம் ஆண்டு வரை GGS அமைப்பின் நீண்டகால நீர் ஓட்டத்தை ஒரு சமீபத்திய ஆய்வு பகுப்பாய்வு செய்தது.
  • நீரோட்டத்தில் பனி உருகுதல் ஆனது 64 சதவீதம், பனிப்பாறை உருகல் 21 சதவீதம், மழை நீர் ஓட்டம் 11 சதவீதம் மற்றும் அடித்தள நீர் ஓட்டம் 4 சதவீதம் பங்களிக்கிறது.
  • 1990 ஆம் ஆண்டு முதல், குளிர்கால மழைப்பொழிவு குறைந்து கோடையின் தொடக்கத்தில் உருகுதல் அதிகரித்ததால் ஆகஸ்ட் முதல் ஜூலை மாதம் வரை உச்ச நீரோட்டம் ஆனது முன்னதாகவே மாறியுள்ளது.
  • வெப்பமயமாதல் போக்குகள் இருந்த போதிலும், பனி மூடிய பகுதி இங்கு குறைந்து வருவதால் பனி உருகல் குறைந்துள்ளது.
  • மழைப்பொழிவு நீர் ஓட்டம் மற்றும் அடித்தள நீர் ஓட்டம் 1980 முதல் 2020 ஆம் ஆண்டு வரை அதிகரித்து வரும் போக்குகளைக் காட்டியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்