ஓர் அரிய தும்பி இனமான குரோகோதெமிஸ் எரித்ரேயா, தென் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உயரமான பகுதிகளில் காணப் படுவதாக மீண்டும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
தாழ்நில வாழ் இனமான குரோகோதெமிஸ் சர்விலியாவுடன் அது கொண்டுள்ள ஒற்றுமை காரணமாக இந்த இனம் முன்னர் தவறாக அடையாளம் காணப்பட்டது.
இந்தியாவில் உள்ள குரோகோதெமிஸ் இனத்தில் தாழ்நிலங்களில் காணப்படுகின்ற C. செர்விலியா, மேலும் 550 மீட்டருக்கு மேலான உயரத்தில் மட்டுமே காணப்படுகின்ற C. எரித்ரேயா ஆகிய இரண்டு இனங்கள் உள்ளன.
ப்ளீஸ்டோசீன் பனி யுகத்தின் போது C. எரித்ரேயா தென்னிந்தியாவில் குடியேறி மலைப் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கலாம்.
C. செர்விலியா இமயமலை மற்றும் தென்னிந்தியாவின் தாழ்நிலப் பகுதிகளில் மிகவும் பரவலாக காணப்படுகின்றது.