TNPSC Thervupettagam

கஞ்சன்ஜங்காவிற்கான IUCN மதிப்பீடு

November 10 , 2025 17 days 86 0
  • கஞ்சன்ஜங்கா தேசியப் பூங்காவானது IUCN அமைப்பினால் "தரமானது/நல்ல" என்று மதிப்பிடப் பட்ட ஒரே இந்தியத் தளமாகும்.
  • கஞ்சன்ஜங்கா உயிர்க்கோளக் காப்பகம் என்றும் அழைக்கப்படுகின்ற இந்தப் பூங்கா, 2016 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் "கலப்பு" வகை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டது.
  • இந்தப் பூங்கா, துணை வெப்பமண்டலக் காடுகள் முதல் 8,586 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மூன்றாவது உயரமான சிகரமான கஞ்சன்ஜங்கா மலை வரையில் 1,784 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது.
  • இதில் 280 பனிப்பாறைகள், 70க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள், பனிச் சிறுத்தைகள், சிவப்பு நிறப் பாண்டாக்கள், இமயமலை வரையாடு மற்றும் 550க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன.
  • லெப்சா மக்கள் மற்றும் திபெத்தியப் பௌத்தர்களுக்கு இந்தப் பூங்கா கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதோடு மேலும் தோலுங் போன்ற பண்டைய மடங்கள் ஆன்மீக மரபுகளைப் பாதுகாக்கின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்