கஞ்சன்ஜங்கா தேசியப் பூங்காவானது IUCN அமைப்பினால் "தரமானது/நல்ல" என்று மதிப்பிடப் பட்ட ஒரே இந்தியத் தளமாகும்.
கஞ்சன்ஜங்கா உயிர்க்கோளக் காப்பகம் என்றும் அழைக்கப்படுகின்ற இந்தப் பூங்கா, 2016 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் "கலப்பு" வகை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டது.
இந்தப் பூங்கா, துணை வெப்பமண்டலக் காடுகள் முதல் 8,586 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மூன்றாவது உயரமான சிகரமான கஞ்சன்ஜங்கா மலை வரையில் 1,784 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது.
இதில் 280 பனிப்பாறைகள், 70க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள், பனிச் சிறுத்தைகள், சிவப்பு நிறப் பாண்டாக்கள், இமயமலை வரையாடு மற்றும் 550க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன.
லெப்சா மக்கள் மற்றும் திபெத்தியப் பௌத்தர்களுக்கு இந்தப் பூங்கா கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதோடு மேலும் தோலுங் போன்ற பண்டைய மடங்கள் ஆன்மீக மரபுகளைப் பாதுகாக்கின்றன.