அமெரிக்க நாடானது பல பயன்பாடு கொண்ட எம்எச்-60 “ரோமியோ” என்ற கடற்கண்காணிப்பு ஹெலிகாப்டர்கள் 24-ஐ இந்தியாவிற்கு விற்பனை செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது.
நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழித்தல், நிலப்பகுதியில் உள்ளதைத் தாக்கி அழித்தல், கண்காணிப்பு, தகவல் நிலை உணர்த்தி, போரின் போது தேடுதல் மற்றும் மீட்பு, கடற்படை ஆயுத ஆதரவு மற்றும் தளவாட உதவி ஆகியவற்றிற்காக இந்த வகை ஹெலிகாப்டர்களை லாக்ஹீட் மார்ட்டின் என்ற நிறுவனம் வடிவமைக்கிறது.